2 % தான் இன்கிரிமண்ட்!!!! உங்களுக்கு எப்படி?
கட்டுமானம் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக LTIமைண்ட் டிரீ நிறுவனம் திகிழ்கிறது. இந்த நிறுவனத்துக்கு இந்தாண்டு சற்று மோசமான ஆண்டு என்றே கூறலாம். இந்தாண்டு போதுமான வணிகம் நடக்காமல் இருந்த நிலையில் தனது பணியாளர்களில் சிலருக்கு மட்டும் அதிகபட்சமாக 2%வரை சம்பள உயர்வை அதுவும் தாமதமாக அந்நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் போதுமான வேலைவாய்ப்பு இல்லாத சூழல்,அமெரிக்க வங்கிகள் திவாலான கதை உள்ளிட்ட அம்சங்களால் வெளிநாடுகளில் இருந்து வரும் டெக் ஆர்டர்கள் இந்தாண்டு போதுமான அளவுக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை. இதனால் வழக்கமாக ஏப்ரல் மாதத்திலேயே இன்கிரிமண்ட் அளிக்கப்படும் சூழலில் இந்தாண்டு ஆகஸ்ட் வரை தள்ளிப் போயிருக்கிறது. இன்போசிஸ்,எச்சிஎல் டெக், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. LTIமைண்ட் டிரீ நிறுவனத்தில் சிலருக்கு 2 விழுக்காடு மட்டுமே சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகவும், வேரியபிள் பே எனப்படும் சலுகைகல் 8.5% வரை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. LTIமைண்ட் டிரீ நிறுவனத்தில் வழக்கமாக இருப்பதைப்போல இல்லாமல் ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை வரையிலான தரவுகளை கணக்கில் எடுப்பதால்தான் இன்கிரிமண்ட் தாமதமானதாக கூறப்படுகிறது. L&Tநிறுவனமும், மைண்ட் டிரீ நிறுவனமும் இணைந்து கடந்த நவம்பர் முதல் இணைந்து பணியாற்றி வருகின்றன. 24 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த கூட்டு நிறுவனத்தின் நிகர லாபம் 1152 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்தாண்டே வேலைக்கு எடுக்கப்பட் ட புதிய பணியாளர்களுக்கு பணி இதுவரை ஒதுக்கப்படவில்லை என்ற புகாருக்கு பதில் அளித்துள்ள அந்த அதிகாரிகள், தேவைக்கு ஏற்பதான் மக்களை புதிதாக பணியில் சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். டெக்மகிந்திரா,விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சம்பள உயர்வு அளிக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அளித்துள்ளனர். எச் சிஎல் நிறுவனம் தனது இளநிலை பணியாளர்களுக்கான சம்பள உயர்வை தாமதப்படுத்தியது. ஒட்டுமொத்த டெக் துறைகளிலேயே அதிக சம்பளம் கொடுத்தது டிசிஎஸ் நிறுவனம் மட்டும்தான். மிகச்சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 12 முதல் 15%ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது.