முதலீட்டாளர்களுக்கு 2லட்சம் கோடி நஷ்டம்…
அமெரிக்காவில் டாலர் மற்றும் அமெரிக்க கடன் பத்திரங்கள் மதிப்பு அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தைகளில் பெரிய சரிவு ஏற்பட்டது.இந்திய சந்தைகளில் அக்டோபர் 4ஆம் தேதி பெரிய சரிவு ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பத்திரங்கள் விற்பனை 5%அதிகரித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிந்து , 65,226 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.7புள்ளிகள் சரிந்து 19ஆயிரத்து436 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.Axis Bank, SBI, IndusInd Bank, NTPC and UltraTech Cement உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிதாக தேசிய பங்குச்சந்தையில் சரிந்தன. Adani Enterprises, Nestle India, HUL, Eicher Motors ,HDFC Bank உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் தவிர்த்து மற்ற துறை பங்குகள் பெரிய உயர்வு பெறவில்லை.Varroc Engineering, Wonderla Holidays, Ujjivan Small Finance Bank, Bajaj Finance, South Indian Bank, MRPL, Mahanagar Gas, L&FS Engineering and Construction Company, Jyoti, Dhanlaxmi Bank உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் விலை குறைந்ததுடன், 5285ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 73 ரூபாய் 10 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400ரூபாய் விலை குறைந்து 73 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலைகளுடன் செய்கூலி,சேதாரம் உள்ளிட்டவையும் சேர்க்கப்படவேண்டும், மேலும் ஜிஎஸ்டியாக 3%செலுத்தவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.