2 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் சரிந்து 65ஆயிரத்து397 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 19,542 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் தனது கடன் விகிதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம் காரணமாகவும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாகவும் பதற்றமான சூழல் சந்தைகளில் நிலவியது. அமெரிக்காவின் பாண்ட் வருவாய் 5%ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் நிகழ்வு இதுவாகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 94 டாலர்களை நெருங்குவதும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகத்தின் முடிவில் அனைத்துத்துறை பங்குகளும் சிவப்பு நிறத்தில் முடிந்தன.1353 நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.2227பங்குகள் சரிவை சந்தித்தன. 128 நிறுவன பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகத்தை முடித்தன. 321 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மூலதனம் 319 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.