மத்தளத்திற்கு 2 பக்கம் அடி!!! மஸ்குக்கு எல்லா பக்கமும் அடி!!!
உலகிலேயே பெரிய டெஸ்லா கார் உற்பத்தி ஆலைகளில் ஒன்று சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ளது. இந்த ஆலை அமைந்திருக்கும் பகுதிகளில் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெஸ்லா கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா காரில் உள்ள y மாடல் கார்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை நிறுத்தப்பட்ட உற்பத்தியால், ஒருமாதத்தில் உள்ள 30% உற்பத்தி பாதிப்பு என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே பரபரப்பாக இயங்கி கார்களை உற்பத்தி செய்வதில் ஷாங்காயில் உள்ள டெஸ்லா ஆலை மிகவும் பிரபலமானதாகும். கடந்தாண்டு டிசம்பரில் மும்முரமாக இயங்கி வந்த சீன டெஸ்லா ஆலை, தற்போது ஒருவாரம் மூடப்பட்டுள்ளதால், சந்தைகளில் கார்கள் தட்டுப்பாடு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.