2 பெரும் பணக்காரர்களின் சந்திப்பு!!!

உலகப்பணக்காரரான பில்கேட்ஸ் அண்மையில் இந்தியா வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் வர்த்தக தலைநகர் என்று வர்ணிக்கப்படும் மும்பைக்கு வந்து இந்திய பிரபலங்களை சந்தித்து வருகிறார். ரத்தன் டாட்டா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கரை அண்மையில் பில்கேட்ஸ் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிலையில் இந்தியாவில் பல வியாபாரிகள்,மற்றும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ரத்தன் டாடாவை பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார்.சுகாதாரம்,மற்றும் ஊட்டச்சத்து குறித்தும், அடுத்த பெருந்தொற்று மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தன் சம்பாத்தியத்தில் பாதிக்கும் மேல் நல்ல காரியங்களுக்காகவே அளித்து புகழ்பெற்ற ரத்தன் டாடாவும், இதே பாணியில் உலகின் பல நாடுகளுக்கும் நிதி அளித்து உதவி வரும் பில்கேட்ஸும் சந்தித்துக்கொண்டது உலகளவில் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமைச்சர் மன்சுக் மாண்டவியா,ராஜிவ் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்த பில்கேட்ஸ், யூடியூபர் ஒருவரையும் சந்தித்து தனது நற்காரிய செயல்பாடுகள் குறித்து பேட்டியளித்துள்ளார்.