2 வருஷமா தாமதம், தட பண்ணுங்க பாஸ்..
மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு, வீடு வாங்குவோர் ஒரு கடிதம் எழுதியிருக்கின்றனர். அதில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் வீடுகள் கட்டாமல் இழுத்தடிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளனர். பணத்தை கட்டிவிட்டு வீட்டை தர தாமதப்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டியுள்ளனர் 3 ஆண்டுகளுக்கு மேல் எந்த திட்டமும் கிடப்பில் போடக்கூடாது என்று அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் கேட்டுள்ளனர். கட்டடங்கள் கட்டுமானத்தை கண்காணிக்கும் அமைப்பான ரெராவின் கண்காணிப்பு குழு தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வீடு வாங்குவோர் கோரியுள்ளனர். ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் அமிதாப்காந்த் என்பவர் தலைமையில் கடந்த மார்ச் மாதமே ஒரு குழு அமைக்கப்பட்டு கட்டுமானங்களை தாமதப்படுத்தும் நிறுவனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கின. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் நிறைவடையாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போதுமான நிதி இல்லாமல்தான் இந்த திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தாமதங்களால் ஏற்படும் நிதிச்சுமையை கட்டுமான நிறுவனங்களும்,நில உரிமையாளர்களும்தான் ஏற்க வேண்டும் என்றும் அமிதாப்காந்த் கமிட்டி ஏற்கனவே கூறியிருக்கிறது.
எந்த மாநிலத்தில் அதிக கட்டுமானப்பணிகள் தேங்கி நிற்கிறதோ அந்த மாநில அரசாங்கங்கள் கட்டுமான நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று அந்த கமிட்டி ஆலோசனை வழங்கியிருக்கிறது.