20,000 கோடி ரூபாய் முதலீடு..
புகையிலை முதல் ஹோட்டல்கள் வரை கால் வைத்த அனைத்து துறைகளிலும் சாதித்து வருவது ஐடிசி நிறுவனம். இந்நிறுவனம் இடைக்காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்ய இருப்பதாக அதன் நிர்வாகி சஞ்சீவ் புரி கூறியுள்ளார். அந்த நிறுவனத்தின் 113 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பேசிய புரி, இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக அளவில் நம்பிக்கை உள்ளது என்று கூறினார். சிகரெட் மற்றும் பிற துறைகளில் நல்ல லாபம் கிடைப்பதாக அந்நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது. அந்நிறுவனத்தின் நிகர வருவாய் 69 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உள்ளதாகவும், அதில் சிகரெட் அல்லாத விற்பனையில் கிடைக்கும் லாபம் மட்டும் 2024 நிதியாண்டில் 20,422 கோடி ரூபாயை கடந்துள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது அந்நிறுவன வருவாயில் சிகரெட் மட்டும் இல்லாமல் கிடைத்த வருவாயில் 65%ஆகும். பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ள போதும் ஹோட்டல் பங்குகள் 3,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. கடந்த 4 ஆண்டுகளில் itc நிறுவனத்தின் மதிப்பு 24.2டிரில்லியன் டாலர்களை கடந்து உள்ளதாக கூறினார். அண்மையில் பிரிக்கப்பட்ட itc ஹோட்டல்கள் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் அந்நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.