22.9மில்லியன் டாலர் சம்பளம்..
பிரபல ஊடக ஜாம்பவானான ரூப்பெர்ட் முர்டாக்கின் 2023 சம்பளம் மட்டும் 22.9மில்லியன் டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ரூப்பெர்ட் விலகியிருந்தார்.அவருக்கு கடந்தாண்டு அளிக்கப்பட்ட சம்பளத்தைவிட 24% கூடுதல் சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது.70 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஊடக பணியில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில் ஓய்வுபெற்றார். பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ரூப்பெர்ட்டின் மகன் லச்லன் முர்டாக் அறிவிக்கப்பட்டுள்ளார்.அடிப்படை சம்பளமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களும்,7.6 மில்லியன் டாலர் அளவுக்கு பங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.4.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட இருக்கின்றன. மகன் லச்லினின் சம்பளம் 21.7 மில்லியன் டாலரில் இருந்து சற்று உயர்ந்து 21.8 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.தந்தை கட்டி ஆண்ட ஊடக சாம்ராஜ்ஜியம் சரிந்து வரும் சூழலில் மகன் பொறுப்பேற்றுள்ளார். இப்போது பிரச்னைகள் வேறுவகையில் உள்ளன. குறிப்பாக தொலைக்காட்சிகளை பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றன. மேலும் காப்பிரைட் பிரச்னைகள் அதிகம் உள்ள சூழலில் லச்லின் பாக்ஸ் நிறுவனத்தை கையில் எடுத்திருக்கிறார். அவர் தனது நிர்வாக உதவிக்காக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபர்ட் மற்றும் மேஜிக் லீப் நிறுவன சிஇஓ பெக்கி ஜான்சனை பாக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைந்துள்ளார்.