22 ஆண்டுகளில் இல்லாத வட்டி உயர்வு!!!
அமெரிக்காவில்தான் விண்ணை முட்டும் விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என்று பார்த்தால் ,அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் இதே நிலைதான்.ஐரோப்பிய மத்திய வங்கியான ECB தனது வட்டி விகிதத்தை கால் விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஜூலைக்கு பிறகு 4.25%அளவுக்கு கடன்களின் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2001ஆம் ஆண்டு இருந்த மிக அதிகபட்ச அளவாக மாறியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்ததில் இருந்து உலகின் பல நாடுகளும் தங்கள் நாட்டு மத்திய வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இப்போதும் விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளதாகவும்,இதனை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஐரோப்பிய வங்கி தெரிவித்துள்ளது. அந்நாட்டின் விலைவாசி உயர்வு என்பது இரட்டை இலக்கங்களை எட்டியிருந்தது. இது தற்போது 5.5%ஆக குறைந்துள்ளது. எனினும் 2 %க்குள் வரவழைக்க ஐரோப்பிய வங்கி முடிவெடுத்துள்ளது.இதுவரை 9 முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது கடன் வட்டி விகிதத்தில் கால்விழுக்காடு உயர்த்திய அடுத்த நாளே ஐரோப்பிய மத்திய வங்கியும் தனது கடன் விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. சுமார் 20 நாடுகளின் பண மதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவிக்கிறது.
ஆற்றல்,உணவு, மது,புகையிலை பொருட்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாததால் பல்வேறு துறை பணியாளர்கள் தங்கள் நிறுவனங்களிடம் கூடுதல் சம்பளம் கேட்டு வருவதால் அந்நாட்டில் சிக்கல் நிலவுகிறது.ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதம் உயர்வு என்பது நோயை விட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக இத்தாலியின் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.