22,858 கோடி ஸ்வாகா..
மே மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்துச்சென்ற தொகை தான் 22 ஆயிரம் கோடி ரூபாய். இது முதல் 6 வேலை நாட்களில் மட்டும் வெளியேறிய தொகையாகும். இந்தியாவில் கடைசி கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் இருந்து , வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்துச்சென்றுள்ளனர். 22ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துச்சென்றுள்ள அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 16700 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் எப்படிவேண்டுமானாலும் வரலாம் என்பதற்காக பங்குச்சந்தைகளில் உள்நாட்டு முதலீடுகள் சரிந்துள்ளன. மே 9 ஆம் தேதி வரை மட்டும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் 5,642 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றனர். இதற்கான 5 முக்கிய காரணங்கள் யாதெனில்..,
- அமெரிக்க கடன் பத்திரங்கள் நல்ல லாபத்தை தருகிறது.
2.நாட்டின் சமநிலையற்ற தன்மை குறியீடான VIX 18.20ஆக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்கின்றனர்
3)சீன சந்தைகள் மிகப்பெரிய ஏற்றம் கண்டு வருகின்றன. அதாவது இந்திய சந்தையான தேசிய பங்குச்சந்தை கடந்த 1 மாதத்தில் 1.5 விழுக்காடு அளவு சரிந்துள்ளது. ஆனால் சீனாவின் பங்துச்சந்தையான ஷாங்காய் பங்குச்சந்தை 2.62 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.
4)அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்கள் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை பணவீக்கம் குறையும் வரை 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.25 விழுக்காடாக வைத்திருப்பதும் இந்திய சந்தைகள் சரிய முக்கிய காரணமாகும்.
5)பொதுத்தேர்தல் முடிவுகள் எப்படி வருமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் குறைவான வாக்குப்பதிவு மட்டுமே. இந்த 5 காரணிகளால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்கிறார்கள் நிபுணர்கள்