25 லட்சம் கோடி சந்தை மதிப்பு..
டாடா குழுமத்தில் ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தின் சந்தை மூலதன மதிப்பும் சேர்த்தால் 25 லட்சம் கோடி ரூபாயை புதன்கிழமை கடந்துள்ளது.டிசிஎஸ் மற்றும் ஜாக்குவார் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்களின் வெற்றியைத் தொடர்ந்து சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ள நிலையில் ஏப்ரல் மாத நிலவரப்படி 16விழுக்காடு அதிகரித்துள்ளது. அண்மையில் டிசிஎஸில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள JLR டீல் முடிக்கப்பட்டது. இந்த டீல் 5 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்டது. இந்த டீலில் ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கும். இது மட்டுமின்றி பிஎஸ்என்எல்லை நிர்வகிக்கும் டீலும் டாடாவசம் உள்ளது. இது மட்டுமின்றி 1 பில்லியன் நெஸ்ட் டீல் உள்ளது. மொத்த சந்தை மதிப்பில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 52 விழுக்காடாக உள்ளது. டாடா மோட்டார்ஸ்,டிரெண்ட் மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பும் மொத்த சந்தை மூலதனத்தில் அதிகமாகும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சந்தை மூலதனத்தில் 4 லட்சம் கோடி ரூபாயில் டிசிஎஸின் பங்குகள் மட்டும் 1.14 லட்சம் கோடிரூபாயாகும். இதற்கு அடுத்த இடத்தில் டாடா மோட்டர்ஸ்,டைட்டன் கம்பனி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 90,259 கோடிரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் டைட்டன் கம்பெனியின் மூலதனமும் 59,100 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த சந்தை மூலதன அடிப்படையில் டிசிஎஸ் முதலிடத்திலும், 16.8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.