25 லட்சம் கட்டிய சலில் பாரெக்..
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சலில் பாரெக் இவர் அண்மையில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் 25 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்துக்குள்ளேயே நடந்த வணிகத்தில் முறைகேடுகள் எழுந்ததாக கூறப்பட்ட நிலையில் இரு தரப்புக்கும் செபி ஒரு உத்தரவை கடந்த 2021, டிசம்பர் 13-ல் பிறப்பித்தது. விதிகளை சலில் மீறியதாக புகார் எழுந்தது. இதற்காக கடந்த 2023-ல் சலிலுக்கு செபி விளக்கம் கேட்டு நோட்டீசும் அளித்தது. இதற்காக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி செட்டில் மண்ட் நேட்டீசையும் சலில் அளித்தார்.
இந்நிலையில் சலில் அளித்த விண்ணப்பத்தை அறிவுரைக்குழு பரிசீலித்தது , கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி இந்த குழு தனது பரிசீலனையை முடித்து அனைத்து கட்ட இசைவுகளையும் தெரிவித்தது. இந்த சூழலில் 25 லட்சம் ரூபாய் சலில் கட்ட சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் அபராத தொகையான 25 லட்சம் ரூபாயை சலில் செலுத்திவிட்டார். இந்நிலையில் சலில் அனுப்பிய தொகையை செபியின் அனைத்து உறுப்பினர்களும் கடந்த மே 21 ஆம் தேதி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் சலில் பணம் செலுத்தியதற்கான ரசீது கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.