27,105 கோடி முதலீடு…
இந்தியாவில் பணியாளர்கள் ஓய்வூதியம் சார்ந்த பணிகளை செய்யும் பிரபல நிறுவனமாக EPFO திகழ்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 27ஆயிரத்து 105 கோடி ரூபாய் ETFதுறையில் முதலீடு செய்திருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. 2022-23 நிதியாண்டில் ஈடிஎஃப் வகையில் மட்டும் 52 ஆயிரத்து 81 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பிஎப் நிறுவனம் செய்திருக்கிறது. இது கடந்த 2021-22 காலகட்டத்தை விடவும் அதிகமாகும். இது தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் ராமேஷ்வர் தெளி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த புள்ளிவிவரத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ETFவகையில் 27ஆயிரத்து 105 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது துறையில் 2016-17 காலகட்டத்தில் 14,983 கோடியும், 2017-18 காலகட்டத்தில் 24,700 கோடி ரூபாயும், ,2018-19 காலகட்டத்தில் 27,974 கோடியும், 2019-20 காலகட்டத்தில் 31,501 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2020-21 காலகட்டத்தில் 32,071 கோடி ரூபாய் முதலீடாக செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தனிப்பட்ட ஒரு நபரின் பங்குகளில் EPFOமுதலீடுகளை செய்யவில்லை என்றும், புளூ சிப் நிறுவனங்கள் உட்பட எதிலும் EPFOநேரடியாக முதலீடு செய்யவில்லை என்றும் தெலி தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுத்தான் முதலீடுகள் செய்வதாகவும் தெலி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 2022 காலகட்டம் வரை மட்டும் EPFO பராமரித்து வரும் தொகையின் அளவு 18.30லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் 8.70 விழுக்காடு ETFவகையிலும், 91.30% கடன் முதலீடுகளிலும் செய்திருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ETF வகை பங்குகளில் EPFOமுதலீடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.