பங்காளி நாட்டில் 272 ரூபா ஒரு லிட்டர் பெட்ரோல் !!!

கடந்த புதன்கிழமை முதல் பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு பணத்தில் 272 ரூபாயாக உள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22 ரூபாய் 20 காசுகள் பெட்ரோல் மீது வரி உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததை அடுத்தே இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை பெற சில நிபந்தனைகள் உள்ளன. இதன் ஒரு பகுதியாகவே பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஹைஸ்பீடு டீசல் விலையும் லிட்டருக்கு 280 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு லிட்டருக்கு 17 ரூபாய் 20காசுகள் வரி உயர்த்தப்பட்டுள்ளது,ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 202ரூபாய் 73 காசுகளாக உள்ளது.மண்ணெண்ணெயின் விலை மீது 12 ரூபாய் 90 காசுகள் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஆயில் விலை ஒருலிட்டர் 196 ரூபாய்68 பைசாவாக உள்ளது. ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் 68 காசுகள் விலை உயர்ந்துள்ளது. அந்நாட்டில் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளதால் எல்லா வகையான பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பணவீக்கம் முதல் பாதியில் 33 விழுக்காடாக உயரும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அந்நாட்டில் மினி பட்ஜெட் ஒன்றும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.