28% வரியில் பி்ன்வாங்க மாட்டோம்…
52 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 28% ஜிஎஸ்டி, சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு 28%ஜிஎஸ்டி விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள், மற்றும் கேசினோக்கள் அதிகமாகும். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 28விழுக்காடு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதாக டெல்லி அமைச்சர் இடிஷி தெரிவித்துள்ளார். 23 ஆயிரம் கோடிரூபாய் வருவாய் வரும் துறைக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிப்பதால் அந்த துறையே அழிந்துவிடும் என்று அதிஷி தெரிவித்துள்ளார்.
ஜூலை ஆகஸ்ட்டிலேயே ஜிஎஸ்டி இந்த வகை ஆன்லைன் வீடியோகம்கள் மற்றும் சூதாட்டங்கள் அதிகமாக இருப்பதால் 28விழுக்காடு வரி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 28% வரி விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களும் இது தொடர்பான சட்ட திருத்தங்களை செய்ய இருக்கின்றன. 18 மாநிலங்கள் இது தொடர்பான சட்டத் திருத்தங்களை செய்துள்ளன. மீதமுள்ள 13 மாநிலங்கள் இன்னும் இது தொடர்பான சட்டத் திருத்தங்களை செய்ய இருக்கின்றன.