3.56 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்..
இந்திய சந்தைகளில் புதன்கிழமை முதலீட்டாளர்களுக்கு சோதனை காலமாக அமைந்தது.அமெரிக்காவின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஃபிட்ச் நிறுவனம் அமெரிக்காவை தரம் குறைத்தது.இது உலகளவில் பங்குச்சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்திய சந்தைகளில் பங்குகள் 1 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் பணம் பெரிய அளவில் சரிந்ததால் மும்பை பங்குச்சந்தையின் சந்தை முதலீடு 303 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
ஜீ எண்டர்டெயின்மென்ட், கனரா வங்கி ,பிவிஆர் ஐநாக்ஸ், லாரஸ் லேப்,பீஜர் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் கண்டன. அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிந்ததன் காரணமாக இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும் பெரிய பாதிப்பு பதிவானது. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரங்களில் உயர்வில் இருந்தபோது இந்தியாவில் அதிக முதலீடுகள் செய்தது அமெரிக்கர்கள்தான். இந்த நிலையில் இந்திய சந்தைகள்,அமெரிக்க சந்தைகள் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் வீழ்ச்சி கண்டதன் எதிரொலியாகமுதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.