சார்லி மங்கர் கற்றுத்தந்த 3 பாடங்கள்..
பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்திற்கு முன்பாக சார்லி மங்கர் குறித்த குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது. சார்லி மங்கர் மிகப்பெரிய முதலீட்டு நிபுணர் என்றும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது முதலில் நிதானம்தான் என்று மெக்சிகோவில் இருந்து வந்திருந்த லூயிஸ் தெரிவித்தார். உடனே லாபத்தை குறியாக வைக்கக் கூடாது என்றும் நீண்டகால பலனுக்கு நிதானம் அவசியம் என்பதை மங்கர் புரிய வைத்ததாக அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டுமே தவிர்த்து அதிக தொகையில் இல்லை என்று மற்றொரு பங்குதாரர் தெரிவித்தார். மேரிலாண்டில் இருந்து வந்திருந்த ஜெரோன் கில்லஸ்பி இதனை தெரிவித்தார். மூன்றாவதாக கிரிப்டோ கரன்சியை தவிர்க்க வேண்டும் என்று மேரி என்பவர் தெரிவித்துள்ளார். பெரிய தவறுகளை மங்கர் செய்தது கிடையாது என்று கூறிய மேரி, பிட்காயின் போன்ற நிறுவனங்களில் முதலீடு கூடவே கூடாது என்பதை புரிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டே கிரிப்டோ கரன்சி பற்றி மங்கர் தெரிவித்ததாகவும், கடந்த 2022-ல் கிரிப்டோ கரன்சி ஒன்றும் இல்லாமல் போகும் என்று கூறியதையும் மேரி நினைவு கூர்ந்துள்ளார்.