ஒரு சார்ஜுக்கு 320 போகும்!!! விலை எவ்வளவு தெரியுமா?
பிரான்ஸில் இருந்து இந்தியா ரஃபேல் போர் விமானங்களை மட்டும் வாங்கவில்லை, சிட்ரியான் போன்ற பிரபல நிறுவன கார்களின் வியாபாரத்தையும் வாங்கியுள்ளது. ஆம், பிரான்சின் முன்னணி கார் நிறுவனமான சிட்ரியான் E-c3 மின்சார வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார்களின் துவக்க விலை ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Live, Feel, Feel Vibe Pack,Feel dual-tone Vibe Pack என 4 வகைகளில் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருப்பதிலேயே உயர்ந்த மாடலின் விலை 12லட்சத்து43 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இந்தியாவில் மின்சார கார்களில் மிகவும் லாபகரமானதாக கூறப்படும் டாடா டியாகோவுக்கு போட்டியாக சிட்ரியான் கார்கள் கருதப்படுகின்றன. சிட்ரியான் கார்களின் விலையை விட டாடா டியாகோ EV விலை அரை லட்சம் குறைவாகவே உள்ளது. 29.2 kWh battery packகொண்டுள்ள சிட்ரியான் கார்கள் ஒரு முறை சார்ஜ் போட்டால் 320 கிலோமீட்டர் வரை பயணிக்கும். 0 – 60 கிலோமீட்டர் வேகத்தை இந்த கார்கள் 6.8 விநாடிகளில் எட்டிவிடும், இந்த கார்களின் பேட்டரி 57 நிமிடங்களில் 80 விழுக்காடு சார்ஜ் ஆகிவிடும்.