3,500 பேர் வேலையிழப்பு..!!!
ArcelorMittal South Africa என்ற நிறுவனம் தென் ஆப்ரிக்காவில் பிரபல நிறுவனமாக வலம் வந்தது. தொடர் தோல்விகள் வணிகத்தில் நஷ்டத்தால் இந்த நிறுவனத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 3,500பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனம், பல்வேறு துறைகளில் ஆலைகளை வைத்துள்ளன.இந்த சூழலில் உருக்காலையில் தண்டவாளங்கள்,இரும்புக் கம்பிகள்,ராடுகளை இந்த ஆலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய உருக்காலை தற்போத மூடப்பட இருக்கிறது. அந்நாட்டில் இருந்து வாங்கப்படும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் அளவு 20விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் மின்சார தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட இந்த நிறுவனம் மிகப்பெரிய சரிவை பங்குச்சந்தைகளில் கண்ட நிலையில் வேறு வழியே இல்லாமல் தற்போது ஆலையே மூடப்படுகிறது. தென்னாப்ரிக்காவில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை சூழலும், விலைவாசி உயர்வும் ஸ்டீல் தேவை குறைந்திருப்பதும் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.