37,000 கோடிக்கு விற்பனை!!! என்ன தெரியுமா?
ஒரு நிறுவனத்துக்கு பண தேவை இருக்கும்பட்சத்தில் பங்குகளை விற்று அவற்றை காசாக்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அதானி குழுமத்தின் புரோமோட்டர்கள் 37,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை இந்தாண்டில் மட்டும் விற்றுள்ளனர். புரோமோட்டர்கள் விற்கும் விகிதம் என்பது 2023 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளதாகவும், கடந்தாண்டு இருந்ததை விடவும் இரட்டிப்பாக அதாவது 87ஆயிரத்து 400கோடிரூபாய் அளவுக்கு பங்குகள் விற்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்த பங்கு விற்பனையில் அதானி குழும பங்குகள் விற்கப்பட்டது மட்டும் 40%என்கின்றனர் பங்குச்சந்தை நிபுணர்கள்.ஆட்டோமொபைல்கள்,அது சார்ந்த உதிரி பாகங்கள் ,சந்தை மூலதன,மின்சாதன பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள்,போக்குவரத்துப்பிரிவு பங்குகளும் இந்தாண்டு அதிகம் விற்கப்பட்டுள்ளன.காப்பீடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் கடந்த 2018முதல் இதுவரை அதிகம் விற்கப்பட்டுவருகிறது.அதானி குழுமத்தில் அதானி கிரீன் 11,200 கோடி ரூபாயும்,அதானி என்டர்பிரைசர்ஸ் 9600கோடி ரூபாயும்,அதானி பவர் 8700 கோடிரூபாயும்,அதானி போர்ட்ஸ் 5,300கோடி ரூபாயும் தங்கள் பங்குகளை விற்றுள்ளன.அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் நிறுவனம் ஆயிரத்து900 கோடி ரூபாய் அளவுக்கு புரோமோட்டர்கள் விற்பனை செய்திருக்கின்றனர்.அதானி குழுமம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள்தான் அதிகம் விற்கப்பட்டுள்ளன. கடன்களை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.