தொடர்ந்து 3-வது நாள்- ஹாட்ரிக் சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் ஏப்ரல் 19ம் தேதி நிலையற்ற சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிந்து வர்த்தக நேர முடிவில் 59,567 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையிலும் 41.40 புள்ளிகள் சரிந்து 17,618 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் மிகப்பெரிய நிலையற்ற சூழல் இருந்ததால் அந்த துறையில் பங்குகள் விற்பனை அதிகளவில் காணப்பட்டது
ஆற்றல் மற்றும் நிதித்துறை பங்குகளும் பெரியளவில் சரிவை கண்டன. HCL Technologies, Infosys, IndusInd Bank, SBI Life Insurance , Wipro உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன, BPCL, Divis Laboratories, Bajaj Auto, Axis Bank, M&M ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு,மற்றும் மருந்துத்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.NCC, Polycab India, Saksoft, Dr Reddy’s Laboratories, Dalmia Bharat , Glenmark Pharmaceuticals உள்ளிட்ட பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. பங்குச்சந்தை நிலைமை இப்படி இருக்க தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 320 ரூபாய்க்கும்,வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரம் ரூபாயாக ஏற்றம் பெற்றது. இங்கே குறிப்பிட்டுள்ள தங்கம் விலை ஜிஎஸ்டி சேர்க்காமல் கூறப்பட்டுள்ளது. நீங்கள் கடையில் வாங்கும்போது தங்கத்துக்கு 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் நகையாக எடுத்தால் அதற்குண்டான செய்கூலி,சேதாரம் என்பது கூடும் என்பதை மக்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.