4.20 லட்சம் கோடி ரூபாய் விற்றும் டார்கெட் மிஸ்…
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் பொதுத்தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் அரசிடம் நிலுவையில் உள்ள பொது சொத்துகளை தனியார் வசம் விற்க முயற்சிகள் நடைபெறுகின்றன. எனினும் இந்த நிதியாண்டும் இலக்கு மிஸ் ஆக அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. BPCL,SCI,கான்கார் உள்ளிட்ட நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை வரும் ஏப்ரல் மே மாதங்களில்தான் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்குள் அரசுத்துறை பங்குகளை விற்று காசாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. 51ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசு சொத்துகளை விற்க திட்டமிடப்பட்டது. ஆனால் விற்கப்பட்டது என்னவோ 10,049 கோடிரூபாய்க்குத்தான்.அதுவும் ஆரம்ப பங்கு வெளியீடு, ஆஃபர் ஃபார் சேல் ஆகிய பிரிவுகளின்கீழ்தான் இந்த நிதியும் திரட்டப்பட்டது. SCI, NMDC Steel Ltd, BEML, HLL Lifecare,IDBI Bank ஆகிய நிறுவனங்களை அடுத்தடுத்து தனியார் மயமாக்கும முயற்சி நடத்தப்பட இருக்கிறது. ஐடிபிஐ வங்கியை வாங்க ஆர்வம் தெரிவிக்கும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கடந்த ஜனவரியில் பெறப்பட்டன. எனினும் ஏலத்தில் எடுத்திருந்தோரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு இன்னும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கவில்லை.
DIPAMஅமைப்பு சார்பில் இன்னும் 11 பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உள்ளது. தேர்தல் நடக்க உள்ள நிலையில் பெரிய சொத்துகள் விற்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினம் உருக்காலையை விற்கும் முயற்சியும் தீவிரமடைந்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் போக்கு அண்மையில் குறைந்துவிட்டதாக கூறும் பொருளாதார நிபுணர்கள் , கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமே 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் 3லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறு சிறு பங்குகளிலும், மீதமுள்ள 69,412 கோடி ரூபாய் பத்து பிரதான நிறுவனங்களிடமும் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமாக விற்கும் நிலை பாதி மட்டுமே நடப்பதாகவும், அதேநேரம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.