வெங்காயத்துக்கு 40 %ஏற்றுமதி வரி..
அத்தியாவசிய பொருளான வெங்காயத்தை ஏற்றுமதி செய்தால் அதற்கு 40 விழுக்காடு வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் டேசி சன்னா என்ற உணவு பொருளையும் இறங்குமதி செய்வதில் இருந்து விலக்கு அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பட்டாணி ரகங்களின் இறக்குமதிக்கும் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரி மே 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு மட்டும் யுஏஇ வங்கதேசத்துக்கு அனுப்ப மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வெங்காயத்தின் உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன் 40 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.