47,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு..
செல்போன் சிம்கார்டுகள் சேவைகள் வழங்கி வரும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை ஏற்றியதால் பொதுமக்கள் கூடுதலாக தங்கள் கைகளில் இருந்து ஓராண்டுக்கு 47 ஆயிரத்து 500கோடி ரூபாயை செலவு செய்ய இருக்கின்றனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் சந்தாவை உயர்த்தியுள்ளன. 5ஜி சேவைகளுக்கு பணம் இழப்பதை சரி செய்யவே இந்த முயற்சியை நிறுவனங்கள் எடுத்துள்ளன. 2016 ஆம் ஆண்டு முதல் 3 நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜியோ நிறுவனம் 13 முதல் 27விழுக்காடும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 10-21 விழுக்காடும், வோடஃபோன் 10-23 விழுக்காடு அளவுக்கும் சந்தாவை உயிரத்துவதாக அறிவித்துள்ளன. அதாவது 239 ரூபாய்க்கு விற்கப்பட்ட சந்தா இனி 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1.5ஜிபி வழங்க 239 ரூபாய் கட்டணத்தை ஏர்டெல் வசூலித்து வந்த நிலையில் அதை தற்போது உயர்த்தியிருக்கிறது. இனி 409 ரூபாயை கட்ட வேண்டும், அதே நேரம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபிக்கு பதிலாக 2.5 ஜிபி டேட்டா இனி கிடைக்கும். உலகளாவிய தரத்துக்கு இந்திய தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த வேண்டுமெனில் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஏர்டெல் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2016-ல் மலிவு விலையில் இல்லை இல்லை வாடிக்கையாளர்களை பிடிக்க இலவசமாகவே சேவைகளை அம்பானி அளித்தார். பின்னர் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்டெலும், வோடஃபோடனும் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.