தந்தையர் தினத்திற்கு 5 பரிசுகள் தரலாம்..
இந்தியாவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த உலகத்தில் மிக ஈடு இனையற்ற தந்தைக்கு வழக்கமான துணிகள்,பொருட்கள் பரிசாக அளிப்பதைவிட,அவர்களுக்கு நிதி சார்ந்த ஏதேனும் பரிசளிக்கலாம்.
அதில் பிரதானமானது உடல்நல காப்பீடு, வயது ஆக ஆக நோய்களின் தாக்கமும் அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கு ஒறு ஹெல்த் இன்சூரன்ஸ் தருவது மிகச்சிறந்த பரிசாக இருக்கும்.
முடிந்தவரை ஹெல்த் செக்கப்பும் வரும் வகையிலான ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாக அமையும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் போலவே அவசர கால நிதியும் மிகவும் முக்கியமானது.எதிர்பாராத நேரத்தில் திடீர் செலவுகளுக்கு தேவைப்படும் பணத்துக்கு பெயர் எமர்ஜென்சி ஃபண்ட்,1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை எமர்ஜென்சி ஃபண்ட் சேமிப்பது சிறந்த பலன் தரும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
தந்தை வாங்கிய கடன்களை அடைப்பது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், நல்ல மதிப்பும் அளிக்கும். இதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். இதேபோல் அப்பா பெயரில் SIP வகையில் பணம் போட்டு வைப்பதும் நல்ல பலன் தரும்.
இது மட்டுமின்றி ரிஸ்க் குறைவான அரசாங்க கடன் பத்திரம் தருவதும் மிகச்சிறந்த பேருதவியாக இருக்கும். அதுவும் உங்கள் தந்தை வயதில் மூத்தவர், மூத்த குடிமகனாக இருந்தால் அது இன்னும் சிறப்பான ரிட்டர்ன்ஸ் தரும்
அண்மையில் வேலையில் இருந்து ரிட்டெயர் ஆன தந்தையாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் வருவாய்க்கு வகை செய்யும் வகையில் நிதித்திட்டங்களை தேர்வு செய்வதும் நலம் பயக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.