தியர்ரி திடீரென விலக 5 காரணங்கள்..
விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தியர்ரி டெலபோர்ட்டே அந்நிறுவன தலைமை பதவியில் இருந்து விலகினார்.ஸ்ரீனிவாஸ் பல்லியா தியர்ரிக்கு பதில் பதவியேற்றார். ஜூலை 2025 வரை தியர்ரிக்கு பதவிக்காலம் இருந்தபோதிலும் அவரே கிளம்பிவிட்டார். தியர்ரி திடீரென கிளம்ப இந்த ஐந்தும்தான் காரணம்..
1).மோசமான செயல்பாடு.. தியர்ரி நிர்வாகத்தின்போதுதான் சந்தை மதிப்பில் 3-ஆவது இடத்தில் இருந்த விப்ரோ நிறுவனம் 4 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. வருவாய் ரீதியிலும் 3 ஆவது இடத்தை அந்நிறுவனம் இழந்தது. 2).பெரிய தலைகள் வெளியேற்றம்.. கடந்த 2 ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தின் பெரிய முக்கிய பதவிகளில் இருந்த பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். கடந்த ஆண்டில் மட்டும் 10 மூத்த பணியாளர்கள வெளியேறிவிட்டனர். மூத்த நிர்வாகியான ஜதின் தலால் திடீரென மாற்று நிறுவனத்துக்கு தாவியதும் பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது 3).லாசாரம மாற்றம்நிறுவனத்துக்கு வெளியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகளை தங்கள் நிறுவனத்தில் தியர்ரி சேர்த்ததும் தவறாக முடிந்துவிட்டது. 4). அசிமுக்கு அதிருப்தி.. விப்ரோ நிறுவனத்தின் உரிமையாளரான அசிம் பிரேம்ஜிக்கு தியர்ரியின் நடவடிக்கை சுத்தமாக பிடிக்காமல் இருந்தது. ஆனால் அசிமின் மகன் ரிஷத் தான் ஒவ்வொரு முயற்சியிலும் தியர்ரியை பாதுகாத்தது தெரியவந்தது. 5).ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பாணியில் பாரிசிலும் தகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த தியர்ரி பாடுபட்டார். இதுவும் தலைமைக்கு பிடிக்கவில்லை என்பாதல் தியர்ரி வெளியேறியதாக கூறப்படுகிறது.