50 லட்சம் சொத்து இருந்தா நடுத்தர வர்க்கமா?
இணையத்தில் ஒரு பதிவர் போட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது. அதாவது 50லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் வைத்திருக்கும் ஒரு நபர் கீழ் நடுத்தர வர்க்கம் என்று அவர் குறிப்பிட்டார். 10லட்சம் ரூபாய் பணம் வைத்திருப்போர் எல்லாம் ஏழைகள் என்றும் அவர் குறிப்பிட்டார். 1 கோடி வைத்திருப்பவர்கள் நடுத்தர வர்க்கம் என்றும், 2 கோடி இருந்தால் அவர் உயர் பிரிவைச் சேர்ந்த நடுத்தரத்தை சேர்ந்தவர் என்றும்5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே பணக்காரர்கள் என்று நபர் ஒருவர் பதிவிட்டார். இது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு சவுரவ் தத்தா என்பவர் விளக்கம் அளித்துள்ளார். 10 கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேலாக சொத்து வைத்திருப்பவர் மட்டுமே அதிக சொத்து வைத்திருக்கும் நபர் என்றும் சவுரவ் கூறினார். வீடு வைத்திருப்பது கையில் பணம் வைத்திருப்பதாக அர்த்தம் இல்லை என்றும், கார்கள் லிக்விடிட்டியில் வராது என்றும், பதிவர் கூறியது சரிதான் என்றும் சவுரவ் தனது பங்குக்கு ஒரு உருட்டு உருட்டிவிட்டுள்ளார்.குறிப்பிட்ட அந்த பதிவு இணையத்தில் 2 நாட்களில் 8லட்சம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பந்தா செய்ய வேண்டாம் என்றும் பலர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் கூறி வருகின்றனர்.