500 கோடி ரூபாய் மானியம்..
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு புதிய FAME திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனரக வாகன துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாம். ஏற்கனவே FAME-2 திட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்களுக்கு சலுகைகள் கடந்த 31 ஆம் தேதி வரை நிறைவடைந்திருந்தன. இந்த நிலையில் 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டது. இந்த திட்டம் வரும் ஜூலை வரை அமலில் இருக்கும் இந்த புதிய திட்டத்துக்கு EMPS என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மின்சார ஸ்கூட்டரை ஒருவர் வாங்கினால் 10,000 ரூபாய் வரை உதவித் தொகையாக அரசு வழங்கும். 3.33 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய 3சக்கர வாகனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமும் கிடைக்க இருக்கிறது. அதுவும் முதலில் வாங்கும் 41 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்க இருக்கிறது. பெரிய மூன்று சக்கர வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் அளிக்கப்பட இருக்கிறது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், EMPS2024திட்டம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் பலருக்கும் வேலைவாய்ப்புகளை இந்த துறை உருவாக்கும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது