5,000 கோடி ரூபாயில் புதிய திட்டம்..!!!
மத்திய அமைச்சரவை கூட்டம் வாரந்தோறும் நடத்தப்படுவது வழக்கம்.கடந்த 24 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மருந்து மற்றும் மருந்து தொழில்நுட்பத்துறையினருக்காக புதிய திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. PRIP என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு 35% வரை நிதி செலவிடப்படும் நிலையில் இந்தியாவில் இது வெறும் 7%ஆக மட்டுமே உள்ளது. எனவே ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளுக்காவும் மட்டும் 5,000 கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-24இல் தொடங்கும் இந்த திட்டம் 2027-28 ஆண்டுவரை இந்த நிதி செலவிடப்பட இருக்கிறது.
மருந்து உற்பத்திக்காக மட்டும் நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஆய்வு மையங்கள் அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. NIPERs எனப்படும் மருந்து நிறுவனங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களால் மருந்துத்துறைக்கு நல்ல எதிர்காலம் ஏற்பட்டுள்ளதாக மருந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை வலுப்படுத்துவதோடு, ஆராய்ச்சித்துறையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.