5,600 கோடி வருமா வராதா என காத்துக்கிடக்கும் கடன்காரர்கள்..
கிட்டத்தட்ட 280 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் வாடியா குழுமம், விமான வணிகத்தில் மட்டும் அடுத்தடுத்து தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 2004ம்ஆண்டு தொடங்கி, 2005ம் ஆண்டு முதல் கோஃபர்ஸ்ட் என்ற நிறுவனம் தனது சேவையை அளித்து வருகிறது.இந்த நிறுவனம் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய நற்பெயரை சம்பாதித்துள்ளது.எனினும் வங்கிகளில் 28 ஆயிரத்து 330 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. அடுத்தடுத்து இன்ஜின்கள் பழுதானதால் என்ன செய்வது என்று புரியாத கோஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நோட்டீஸை எடுத்து நீட்டியது. இதனால் அதிர்ந்து போன கடன்காரர்கள் தங்கள் பணம் வருமா என்று சந்தேகத்துடன் கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். நிறுவனத்தை இன்னும் வளர்க்க கடந்த 2020ம் ஆண்டு ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு இந்த நிறுவனம் திட்டமிட்டது அதற்குள் கொரோனா வந்துவிட்டதால் விரிவாக்க திட்டத்தை தள்ளிப்போட்டது. அடுத்தடுத்த சிக்கல்களால் இந்த நிறுவனம் வளர்வது தடைபட்டுக் கொண்டே இருந்தது. இந்த வங்கிக்கு இந்தியாவில் சென்ட்ரல் வங்கி 434 கோடி ரூபாயும்,பாங்க் ஆஃப் பரோடா 85.79 கோடி ரூபாய் கடனும் 2020ம் ஆண்டு நிலவரப்படி கடன் தந்துள்ளனர்
வெளிநாட்டிலும் கணிசமான கடனை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. எப்போதெல்லாம் நிறுவனத்துக்கு பண தேவை இருக்கிறதோ அப்போதெல்லாம் வாடியா குழுமம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து நிறுவனத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டே வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக நிறுவனம் பெரிய சிக்கல்களை சந்தித்தால் , தங்கள் கடன் 5,600 கோடி வருமா என்று வங்கிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இனி கோஃபர்ஸ்ட் நிறுவனம் என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.