6 மாதத்தில் 5ஜி சேவை.. வோடஃபோன் அதிரடி..
கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் அடுத்த 6 மாதங்களில் 5ஜி சேவையை அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்காக வெண்டார்களுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் அக்சய மூண்ட்ரா இதனை உறுதி செய்துள்ளார். பிகார் மற்றஉம் மும்பை சர்க்கிளில் முதலில் 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. பிரதான குறிக்கோளாக பெரிய நகரங்களை இலக்காக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு ARPU என்று பெயர். கடந்த 11 மாதங்களில் இந்த தொகை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் மூண்ட்ரா தெரிவித்தார். எரிக்சன், நோக்கியா, சாம்சங் நிறுவனங்களுடனும் வோடஃபோன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நோக்கியா, எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் தற்போது வரை ZTE நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றன. ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்கள் 3லட்சம் 4ஜி சைட்களை கொண்டுள்ள நிலையில் தங்கள் நிறுவனம் 1.8லட்சம் 4ஜி சைட்களை வைத்திருப்பதாகவும் வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 24-30 மாதங்களுக்குள் 40 விழுக்காடு வருவாயை எடுக்க திட்டமிட்டுள்ளன. அடுத்த 12-15 மாதங்களில் 4ஜி சேவையை மேலும் விரிவுபடுத்த இருப்பதாகவும் மூண்ட்ரா தெரிவித்தார்