விரைவில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் – TRAI பரிந்துரைக்காக Waiting..!!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விற்பனை செயல்முறை தொடர்பான விதிகள் குறித்த பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பித்தால் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடப்பு ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்:
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த பரிந்துரைகளை டிராயிடம் பெற்ற பிறகு ஏலத்தில் ஏல சுற்றுகளை தொடங்க அரசாங்கம் 60-120 நாட்கள் அவகாசம் எடுத்தது.
தற்போதைய நடைமுறையின்படி, DoT-யில் உள்ள உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (முன்னர் டெலிகாம் கமிஷன்) டிராய் பரிந்துரைகள் மீது முடிவெடுத்து, இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவையை அணுகும்.
நடைபெறவுள்ள ஏலத்திற்கான விற்பனையாளராக MSTC ஐ ஏற்கனவே DoT தேர்ந்தெடுத்துள்ளது 5G ஸ்பெக்ட்ரம் ஆலோசனையில் பங்கேற்பவர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் (நாளைக்குள்) கூடுதல் கருத்துகளைச சமர்ப்பிக்குமாறு TRAI அறிவுறுத்தியுள்ளது.