5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முதல் நாள்
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முதல் நாளில் முகேஷ் அம்பானி, சுனில் பார்தி மிட்டல் மற்றும் கௌதம் அதானி ஆகியோர் ₹1.45 லட்சம் கோடிக்கு ஏலம் எடுத்தனர்.
5G இருப்பு விலையில் 72 GHz அலைக்கற்றைகளின் மதிப்பு ரூ. 4.3 லட்சம் கோடி. ஏலங்கள் ₹70,000 முதல் ₹1,000,000 கோடி வரை வருமானம் ஈட்டும் என்று DoT எதிர்பார்த்தது. ஆனால் DoT எதிர்பார்த்தைவிட அதிக விலைக்கு 5G ஏலம் போனது.
முதல் நாள் ஏலம் “எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி 2015 சாதனைகளை முறியடித்தது” என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
5G ஸ்பெக்ட்ரம் அதி-உயர் வேகத்தை வழங்குகிறது (4G ஐ விட சுமார் 10 மடங்கு வேகம்), லேக்-ஃப்ரீ இணைப்பு மற்றும் நிகழ்நேரத்தில் தரவைப் பகிர பில்லியன் கணக்கான இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்க முடியும்.
எந்த நிறுவனம் எவ்வளவு அலைக்கற்றைகளை வாங்கியது என்பதை DoT வெளிப்படுத்தவில்லை.