5ஜி ஏலம் முடிந்தது; யாருக்கு எவ்வளவு?
கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்துள்ளது. விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட அலைக்கற்றையில், சுமார் 71 சதவிதம் அளவிற்கு ஏலம் எடுக்கப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் 37 சுற்றுகளாக நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆறு நாட்களில் 37 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஏலத்தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடி ரூபாயை கடந்ததுள்ளது. ஆனாலும், முடிவு எட்டப்படாததால் இன்றும் ஏலம் தொடர்ந்தில், மேலும் 3 சுற்றுகள் நடைபெற்று ஏலம் நிறைவு பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனமும் உள்ளன. வோடாபோன் – ஐடியா நிறுவனம் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. அதானி குழுமம் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டில் 5ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீடு நிறைவு பெற்றுவிடும் என்றும், ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ள 5G அலைக்கற்றை, இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்க போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.