நேரடி வரியாக 6.5 லட்சம் கோடி வருவாய்.!!!

மத்திய அரசுக்கு ஆக்டோபஸ் போல பல வகைகளில் நேரடியாக வரிகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேரடி வரியாக 6 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் வரி கிடைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கடந்த 10ஆம் தேதி வரையிலான தரவாகும். இந்த அளவு என்பது கடந்தாண்டு காலகட்டத்தைவிடவும் 15.7%அதிக வருவாயாகும். இதனை மத்திய நிதி அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது. ரீபண்ட் அளவு என்பது 5,84 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதுவும் கடந்தாண்டை விட 17.33% அதிகமாகும். இதுவரை பெறப்பட்டுள்ள தொகையானது 23-24 நிதியாண்டின் மொத்த பட்ஜெட்டில் 32.03 % அளவாகும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பணத்தை திரும்ப அளிக்கும் முறையானது 3.73% கடந்தாண்டைவிட அதிகமாகும், தனிநபர் மற்றும் கார்பரேட் வருமான வரிமூலம் இந்த வரியானது வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கு ஜிஎஸ்டியில் கிடைக்கும் வருவாயையை விட நேரடி வரிகள்தான் அரசாங்க நிதி ஆதாராத்தில் மிகமுக்கிய பங்களிக்கிறது. மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியமான சிபிடிடி,நேரடியாக வரியை வசூலிப்பதற்காகவும்,இந்திய வருவாய்த்துறை சேவை ஆற்றி வருகிறது.எவ்வளவு வருவாய்,வந்துள்ளது என்பதையும் அதனை எந்தளவு வரி செலுத்த வேண்டும் உள்ளி்ட்ட துறைகளில் மத்திய நிதியமைச்சகம் அதீத ஆர்வம் காட்டி வருகிறது.