கேட்டத விட 6 மடங்கு அதிகம்…
பிரபல இணைய நிறுவனமான சாஃப்ட் பேங்க் நிறுவனத்தில் ஆர்ம் என்ற உட்பிரிவு உள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் அமெரிக்க பங்குச்சந்தையில் புதிதாக அறிமுகமானது.இந்த உட்பிரிவு சிப் தயாரிப்பு நிறுவனமாகும்.ஆர்ம் நிறுவனத்தின் ஐபிஓ அண்மையில் வெளியிடப்பட்டது. 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை திரட்ட இந்த நிறுவனம் சந்தையில் ஆரம்ப பங்கை வெளியிட்டது.இந்த நிறுவனம் திரட்ட இருந்த 5 பில்லியனைவிட 6 மடங்கு,அதாவது 30 பில்லியன் அளவுக்கு நிதி குவிந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு இத்தனை வரவேற்பு உள்ளதால் சில சிக்கல்களும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.47 முதல் 51 டாலர்கள் என்ற அளவில் ஒரு பங்கின் விலை மாறும் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 13 ஆம் ஆண்டு மேலும் ஒரு ஐபிஓ வெளியிட்டு மீண்டும் நிதி திரட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இத்தனை பெரிய முதலீட்டை பெறும் ஒரு நிறுவனமாக ஆர்ம் நிறுவன பங்குகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ம் நிறுவனத்தின் செல்போன்கள் உலகளவில் மந்த நிலையில் இருந்ததாகவும், தற்போது அதற்கான வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிளவுட் கம்பியூட்டிங் நுட்பத்தில் 10%க்கும் அதிகமான வளர்ச்சி இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்துக்கும் சீனாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்க நுட்பங்களை பயன்படுத்தி சிப் தயாரிக்க சீன நிறுவனங்களுக்கு அண்மையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், சீனாவில் ஆர்ம் நிறுவன பொருட்களுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் சீனாவில் மட்டும் 24.5விழுக்காடு அளவுக்கு பொருட்களை விற்றுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 2.68 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனையை இந்த நிறுவனம் செய்திருக்கிறது.