600 பேர் பணிநீக்கம்!!!
இந்தியாவில் மலிவு விலையில் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்வதில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த நிறுவனம் ஓயோ. இந்த நிறுவனத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மொத்தமாக 3 ஆயிரத்து 700 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் சரியாக பணியாற்றாத, திறமை குறைந்த பணியாளர்களை நீக்கிவிட்டு புதிதாக பணியாளர்களை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 600 பணியாளர்களை பணியில் இருந்து தூக்கிவிட்டு புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஓயோ இறங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இந்த பணிநீக்கம் இருக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக பணியில் 250 பேரை சேர்த்துவிட்டு 600 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சேவையில் உள்ள குறைபாடுகளை களைந்துவிட்டு,பங்குதாரர்களை வலுப்படுத்தும் முயற்சியிலும் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது.பல்வேறு வகையான உணவகங்கள் மற்றும் தங்கும் இடங்களுடன் வலுவான தொடர்பில் ஓயோ ஹோட்டல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.