62,279 கோடி ரூபாய் சந்தை மதிப்பு சரிவு..!!!
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்தவாரம்,முன்னணியில் இருந்த 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 62,279 கோடி ரூபாய் சரிந்துள்ளது.இதில் மிகப்பெரிய பாதிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத்தான் ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்,icici bank,இந்துஸ்தான் யுனிலிவர்,ஐடிசி, ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியா,பார்தி ஏர்டெல்,ஆகிய நிறுவனங்களும் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன.HDfc bank,இன்போசிஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்திருக்கின்றன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் சந்தை மதிப்பு 38,495.79 கோடி ரூபாய் சரிந்து 16,32577.99 கோடி ரூபாயாக இருக்கிறது.இதற்கு அடுத்த இடத்தில் பெரிய பாதிப்பை சந்தித்தது,இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பங்குகள்தான், 14,649 .7 கோடி ரூபாய் வீழ்ச்சியை கண்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.88 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன சந்தை மதிப்பும் வீழ்ந்துள்ளது. 4194.49 கோடி ரூபாய் சரிந்த இந்த நிறுவன சந்தை மதிப்பு 4,84லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. பல காலமாக லாபத்தை பதிவு செய்து வந்த ஐடிசி நிறுவன பங்குகள் 3,037 கோடி ரூபாய் மதிப்பு சரிந்து, ஐந்தர லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கி நிறுவன பங்குகள் 898 கோடி ரூபாய் சரிந்து 6.78 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. டாடா கன்சல்டன்சி நிறுவன சந்தை மதிப்பு 512.27 கோடி ரூபாய் சரிந்து 12.36 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதேபோல் பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பும் 490 கோடி ரூபாய் சரிந்து 5.08 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதற்கு நேர் எதிராக HDFCநிறுவனத்தின் சந்தை மதிப்பு 10,917 கோடி ரூபாய் உயர்ந்து 11,92,752 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் இன்போசிஸ் நிறுவன சந்தை மதிப்பு 9,338 கோடி ரூபாய் அதிகரித்து 5.98 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.பஜாஜ் பினான்ஸ் நிறுவன சந்தை மதிப்பு 6,562.1 கோடி ரூபாய் அதிகரித்து 4.43 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சராசரியாக 500புள்ளிகள் உயர்ந்தன.