இன்போசிஸ் நிறுவனத்துக்கு 6329 கோடி ரீபண்ட்..,
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்துக்கு வருமான வரித்துறையிடம் இருந்து 6,329 கோடி ரூபாய் வின்டு பால் டாக்ஸ் ரீபண்ட் எனப்படும் செலுத்திய தொகை திரும்ப அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு வரி செலவீனமாக 2763 கோடி ரூபாய் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நிறுவனம் இந்த காலாண்டில் செய்ய வேண்டிய முதலீடுகள் குறித்து ஏற்கனவே அறிவித்திருந்தபடி அதற்கான பணிகளை செய்து வருகிறது. 2007-08 முதல் 2018-19 கால கட்டம் வரையில் இந்த புதிய ரீபண்ட் தொகை கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதே நேரம் 2022-23 நிதியாண்டில் வரி செலவீனம் அதிகம் காட்டப்பட்டுள்ளது. இதில் வட்டியும் அடங்கும். 2011-12 காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் வரி தேவை என்பது4 கோடி ரூபாயாக இருந்தது.
2022-23 நிதியாண்டில் அந்நிறுவனம் செலவீனமாக 9214 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு காட்டியுள்ளது. அதே நேரம் இந்நிறுவனம் 2021-22 காலகட்டத்தில் வெறும் 7964 கோடி ரூபாயை மட்டுமே செலவாக காட்டியுள்ளது. டிசம்பருடன் முடிந்த காலகட்டத்தில் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலவீனமாக கணக்கு காட்டியுள்ளது. இந்த வரி செலவீனத்துக்கு வரி தேவையாக 277 கோடி ரூபாயை வட்டியுடன் வருமான வரித்துறை கேட்டுள்ளது. ஆனால் 2018-19 முதல் 2021-23 காலகட்டம் வரை உள்ள வரிச்சலுகைகளில் மாறுதல்கள் வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனம் கேட்டுள்ளது. 2007-09 முதல் 2016-17 வரை 14 கோடி ரூபாய் ரீஃபண்ட் வேண்டும் என்றும் இன்போசிஸ் நிறுவனம் வருமான வரித்துறையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.