முதலீட்டாளர்களுக்கு 7.90லட்சம் கோடி ரூபாய் லாபம்..
ஈக்விட்டி பிரிவில் முதலீடு செய்தோரில் கடந்த 5 நாட்களில் மட்டும் 7 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்திருப்பதாக பங்குச்சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பணத்தை கொண்டுவந்து இந்திய சந்தைகளில் கொட்டியுள்ளனர்.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65ஆயிரத்து672 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் மட்டும் 298 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது. ஜூலை 5 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்பட்டது.துவக்கத்தில் லாபத்தில் வர்த்தகமான பங்குச்சந்தைகள், பின்னர் கடைசி நேரத்தில் சரிந்தன. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65,446 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.50 புள்ளிகள் உயர்ந்து 19,398 புள்ளிகளில் வணிகம் முடிந்தது. பஜாஜ் ஆட்டோ,டவிஸ் லேப்,எச்டிஎப்சி லைஃப், மாருதி ஆகிய நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன.hdFC BANK , எய்ச்சர் மோட்டார்ஸ்,டாடா கன்சியூமர்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் வீழ்ந்தன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 460 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 680 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 75 ரூபாய் 80காசுகளாக உள்ளது.,கட்டி வெள்ளி விலை கிலோ 75 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 % ஜிஎஸ்டி, செய்கூலி,சேதாரம் ஆகியவை சேர்க்க வேண்டும். ஆனால் கடைக்கு கடை செய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..