டிசம்பரில் 782 கோடி பரிவர்த்தனைகள்
தேசிய பேமன்ட்ஸ் கழகம் எனப்படும் NPCI அண்மையில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படிகடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 782 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.12 கோடியே 82 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு நவம்பர் மாதம் இருந்ததைவிட 7.12விழுக்காடு அதிகமாகும். கடந்தாண்டு டிசம்பரை ஒப்பிடுகையில் பரிவர்த்தனைகளின் அளவு71 விழுக்காடும், பரிவர்த்தனைகளின் மதிப்பு 55 விழுக்காடும் உயர்ந்துள்ளதாக NPCI தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மட்டும் சல தொய்வு இருந்தபோதும் UPI பரிவர்த்தனைகள் கணிசமாக உயர்ந்தே காணப்பட்டது. 2022-ம் ஆண்டு மொத்தமாக 7ஆயிரத்து 400 கோடி பரிவர்த்தனைகள் மூலம் 125லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு 3ஆயிரத்து 800 கோடி பரிவர்த்தனைகள் மூலம் 71 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டு யுபிஐ பரிவர்த்தனை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.முதல் 3 ஆண்டுகளில் 100 கோடி பரிவர்த்தனைகளை யுபிஐ கடந்து சாதித்தது. இந்திய டிஜிட்டல் சந்தையில் போன்பே,கூகுள் பே மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் மட்டுமே 94.6% பங்களிப்பை செய்கின்றன.