85,500 கோடி ரூபாய் லாபம்..
150 ஆண்டுகளுக்கும் முன்பே டாடா குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், ஆற்றல் துறை உள்ளிட்ட துறைகளில் 2024 நிதியாண்டில் வரிகள் போக மீதம் லாபமாக 85,510 கோடி ரூபாய் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. 4.35லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கார்களை விற்றுத்தள்ளியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 2.41 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளன. ஸ்டீல் நிறுவனம் 2.27 லட்சம் கோடியும், டாடா பவர் நிறுவனம் 61.449 கோடிரூபாயும்அதிகம் வருவாய் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன. டாடா குழுநத்தின் 21 நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளன. 46,099 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தை டிசிஎஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 31,107 கோடி ரூபாயாக உள்ளது. டாடா குழுமத்தில் 16 நிறுவனங்கள் 1,200விழுக்காடு லாபத்தை பதிவு செய்துள்ளன. அதே நேரம் 5 நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. 2024 நிதியாண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1222விழுக்காடு லாபத்தை பதிவு செய்துள்ளது.
31,107 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிறுவனம் லாபத்தை அள்ளிக்குவித்துள்ளது. 2023-ல் 67,619 கோடி ரூபாயாக இருந்த லாபம், 2024 நிதியாண்டில் 26 விழுக்காடு உயர்ந்து 85,510 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2019-ல் இந்த குழுமத்தின் லாபம் 18,976 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த லாபம் 351 விழுக்காடு அதிகரித்துள்ளது. டாடா குழுமத்தின் வருவாய் என்பது 7.16 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 56 விழுக்காடு உயர்ந்து 5 ஆண்டுகளில் 11.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.