9,350 கோடி ரூபாய் முதலீடு..!!!
பல லட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, அடுத்தகட்டமாக பசுமை ஆற்றல் பக்கம் தனது கவனத்தை திருப்பி வருகிறார். இதன் முன்னோட்டமாக டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு 9350 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. டிசம்பர் 26 2023 அன்று அந்நிறுவன பங்குகளின் விலை 1,480 ரூபாயாக ஒரு பங்கின் விலை இருந்தது. அதானியின் பசுமை ஆற்றல் நிறுவனம் 2030ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட் மின்ஆற்றல் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. 2 லட்சம் ஏக்கரில் இதற்கான பணிகள் தயாராகி வருகிறது. இந்த முதலீடு என்பது நாட்டின் துாய்மை ஆற்றலுக்கான முயற்சி மட்டுமில்லை என்று கூறியுள்ள அந்நிறுவனம் ஆற்றல் பரிமாற்றத்தின் புதிய நிலை என்றும் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றப்பாதை மட்டுமின்றி வளர்ச்சித் திட்டங்களுக்கும் இந்த முதலீடுகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி நடக்க உள்ள சிறப்பு பொதுக்கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. 8 சர்வதேச வங்கிகளின் உதவியுடன் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கட்டுமானங்களை நடத்த AGEL நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களால் 2.167 MWமின்னாற்றல் உற்பத்தியாகும். 1.425 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஈக்விட்டி முதலீடுகள் மூலம் மொத்த முதலீடுகள் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது.