மீண்டும் டிவிட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு….
எலான் மஸ்க்கின் மறுபெயர் பிரச்னை என்று கூட சொல்லலாம்,அத்தனை பெரிய சவால்களை தாங்கித்தான் அவர் பல வணிகங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் மீது, முன்னாள் ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். பெரிய தொகை கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க், பழைய பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிய அவர், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்காக கூடுதல் தொகை அளிப்பதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் அறிவித்த பணத்தை தரவில்லை என்று முன்னாள் பணியாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 500 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மஸ்க் இன்னும் தரவில்லை என்று வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ் ஒயிட்ஃபீல்ட் என்பவர் டெலவர் பெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேலையை விட்டு தூக்கினால் சம்பளத்துடன் 2 மாத சம்பளம் தருவதாக டிவிட்டரின் புதிய தலைமை கூறியிருந்த நிலையில், அது தரப்படவில்லை என்று நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணத்தை மிச்சம்பிடிப்பதாக கூறி பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை கடந்தாண்டு அக்டோபரில் டிவிட்டர் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. டிவிட்டர் நிறுவனத்துக்கு ஊடக தொடர்பு அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே முழு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக வேறொரு வழக்கில் டிவிட்டர் கூறியதை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. டிவிட்டரின் பழைய பணியாளர் என்ற ஒரே காரணத்துக்காக தம்மை மஸ்க்கின் புதிய நிர்வாகத்தின் பணியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பல ஊழியர்களுக்கு ஈவு இரக்கமே இல்லாமல் மொத்த தொகையையும் டிவிட்டர் நிறுவனம் ஏமாற்றியதாகவும் புகார்கள் குவிகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை டிவிட்டரின் புதிய நிர்வாகம் மறுத்துள்ளது.