87% சரிந்த சீன நிறுவனம்
சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த எவர் கிராண்டே குழுமம் கடந்த 17 மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் குறிப்பிட்ட அந்த நிறுவன பங்குகள் 87% சரிவை கண்டுள்ளன. 2017-ல் 50பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது வெறும் 586 மில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. பல ஆண்டுகளாக கடனில் சிக்கித்தவித்துள்ள இந்நிறுவனம்,கடந்த 6 மாதங்களில் 33பில்லியன் யுவான் அளவு பணத்தை இழந்திருக்கிறது.2009ஆம் ஆண்டு பங்குச்சந்தைகளில் அறிமுகமான இந்நிறுவனம் ஹாங்காங்கிலும் பெரிய சரிவை கண்டுள்ளது. சீனாவில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக கிட்டத்தட்ட 95 % சரிவை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது. சீன புள்ளிவிவரத்தின்படி அந்நிறுவனத்தின் முதல் பாதி இழப்பின் மதிப்பு 39.3 பில்லியன் யுவானாக மதிப்பிடப்பட்டுள்ளது. எவர்கிராண்டே நிறுவனம்,1.74டிரில்லியன் யுவான் சொத்து வைத்திருக்கிறது.13.4 பில்லியன் யுவான் அளவுக்கு ரொக்கப்பணத்தையும் அந்நிறுவனம் வைத்திருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்களிடம் அவகாசம் கோரியிருந்த நிறுவனம், தற்போது அதனை அடைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. மிகப்பெரிய சரிவை கண்டிருக்கும் இந்த நிறுவனத்தை மீட்க முடியாமல் அடுத்தடுத்த கணக்கு தணிக்கை நிறுவனங்கள் ஓட்டம் பிடித்துவிட்டனர் என்பதை இங்கே கவனிக்கவேண்டியிருக்கிறது.