கால் நூற்றாண்டில் இல்லாத சரிவு…
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் எப்போதும் ஒரு தனித தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. எனவே இந்த செய்தி உங்களில் பலருக்கு பலன்தரும் என்ற நோக்கில் எழுதுகிறோம். நம்மூர்களில் இந்திய ரூபாய் இருப்பதைப்போல மலேசிய பணத்தின் பெயர் ரிங்கிட். இந்த ரிங்கிட்டிற்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பை வைத்துத்தான் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதா குறைந்துள்ளதா என்று அறிய முடியும். ஆசிய அளவில் பெரிய பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது.இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட் மதிப்பு பெரியளவில் சரிந்து வருகிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பு 0.3%குறைந்து ஒரு டாலருக்கு நிகராக 4.765 ரிங்கிட்டாக உள்ளது. இது கடந்த 1998ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகும் குறைந்தபட்ச அளவாகும். ஆசியாவிலேயே ஜப்பானிய “என்” தான் மிகவும் சரிவாக இருந்த நிலையில் அதற்கு அடுத்தபடியாக மலேசிய ரிங்கிட் மாறியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரும் இந்த பண மதிப்பு குறைய காரணமாக கூறப்படுகிறது.தொடர்ந்து 6 மாதங்களாக ஏற்றுமதி அளவு குறைந்தபடியே இருக்கிறது.மலேசியாவின் டிரேடிங் பார்ட்னரான சீனாவில் பல கட்டுப்பாடுகளால் இந்த பண மதிப்பு விழுந்து கிடக்கிறதாம். நிலைமையை சமாளிக்க மலேசிய மத்திய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடியாது என்றும் கூறியது. இதனால் மலேசிய ரிங்கிட் மதிப்பு குறைந்து வருகிறதாம். சீக்கரம் போர முடிங்கப்பா என்று பலரும் புலம்புவதையும் கேட்க முடிகிறது.