பணத்தை கொட்டி முதலீடுகளை வலுப்படுத்தும் பிரபல கார் நிறுவனம்!!!
தென்கொரிய நிறுவனமான ஹியூண்டாய் இந்த ஓராண்டில் மட்டும் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய இருக்கிறது.அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஹியூண்டாய் நிறுவனத்தின் மின்சார கார் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த அளவே விற்பனையாகும் என்று பலரும் கணித்திருந்த சூழலில் மின்சார கார்களின் விற்பனை 11.5% அதிகரித்துள்ளது. உலகளவில் 43 லட்சம் மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன. உலகளவில் டொயோடா நிறுவன கார்கள் உற்பத்தியில் அதிகளவிலும், போக்ஸ்வாகன் கார்கள் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் கியாவும்-ஹியூண்டாயும் இணைந்து உற்பத்தி செய்யும் கார்கள் 3-ம் இடத்தை பிடித்துள்ளன. உலகளவில் டெஸ்லா மற்றும் போக்ஸ்வாகன் ரக கார்கள்தான் அதிகளவில் விற்பனை செய்யப்படும் சூழலில் இரு நிறுவனங்களுமே கார் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் எதிர்பார்த்தை விடவும் அதிக டெஸ்லா கார்கள் விற்கப்பட்டுள்ளன.