10,000 கோடி எட்டிய பிரபல கார் நிறுவனம்..
சொகுசு கார்கள் உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்ற மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் 10,000 கோடி ரூபாய் வருவாய் என்ற அளவை தொடர்ந்து 8ஆவது ஆண்டாக எட்டியுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி வரையுள்ள காலகட்டத்தில் இந்நிறுவன விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. ஒவ்வொரு சொகுசு காரும் 1.5 கோடி ரூபாய் சராசரி மதிப்பு கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் நடப்பு நிதியாண்டில் மட்டும் மெர்சிடீஸ் நிறுவனம் 16,497 கார்களை விற்றுள்ளது.இது கடந்தாண்டைவிடவும் 38%அதிகரிப்பாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருவாயை எட்டும் அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. 2023 நிதியாண்டில் மட்டும்மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 884 கோடி ரூபாயாக உள்ளது. டாப் எண்ட் ரக மாடல் கார்களைத்தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். GLS, S-Class, S-Class Maybach, GLS Maybach, AMGs,EQS ரக கார்கள்தான் மக்களின் விருப்பமாக இருக்கிறதாம்.இந்தியாவில் பணக்காரர்கள் அதிகரித்துள்ளதன் வெளிப்பாடாகவே இந்த கார்களின் விற்பனை . 30 மில்லியின் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக சொத்து வைத்திருப்போரின் அளவு என்பது, 2027-ல் 20,000பேரை தொடும் என்றும் கணிக்கப்படுகிறது.