இந்திய சந்தைகளை புகழ்ந்து தள்ளிய பிரபல நிறுவனம்
கோல்டுமேன் சாச்ஸ் என்ற நிறுவனம் உலகளவில் மிகவும் மதிப்புமிக்க நிதி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. உலகளவில் முன்னணி பங்குச்சந்தைகளை அலசி ஆராய்ந்த கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் இந்தியாவில்தான் அதிக மல்டி பேக்கர் என்ற லாபத்தை அதிகம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளது. நிஃப்டி 500 பங்குச்சந்தையில் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் அதாவது 10 மடங்கு அதிக லாபம் எடுத்துள்ளதாகவும் வியப்புடன் கூறியுள்ளது. நிஃப்டி 500 பங்குச்சந்தையில் 269 பங்குகள் 10 மடங்கு ரிட்டர்ன்ஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளைவிட 30 விழுக்காடு அதிக வருவாயை இந்திய சந்தைகள் ஈட்டி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச முதலீடு ரிட்டர்ன்ஸ், அதிக பங்குகள் கையிருப்பு வைத்திருத்தல் உள்ளிட்ட அம்சங்களால் இந்திய சந்தைகள் நீடித்து நிலைப்பதாக கூறியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் உள்ள பங்குகளில் 200 பங்குகள் 20 விழுக்காடுக்கும் அதிக ரிட்டர்ன்களை தருகிறது என்கிறது கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், நிஃப்டி 50 சந்தை இதுவரை இல்லாத உச்சத்தை எட்ட இருப்பதை பாராட்டியுள்ள அந்த தரகு நிறுவனம். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், புளூடார்ட் எக்ஸ்பிரஸ்,திரிவேனி டர்பைன், வெஸ்ட்லைஃப் ஃபூட் வேர்ல்டு, விஐபி இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நல்ல ரிட்டர்ன்ஸ் தந்திருப்பதாக கூறுகிறது கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம்.