நண்பன் தான் உதவினான்..கதறும் பாகிஸ்தான்….
கடும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு அண்மையில் சர்வதேச நாணயநிதியம் 3பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்க இசைவு தெரிவித்துள்ளது.இதுவரை தாக்குப்பிடித்ததே சீனாவின் தயவால்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரீப் தெரிவித்துள்ளார். உரியநேரத்தில் சீனாதான் தங்களுக்கு உதவியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.பாகிஸ்தான் வளரவேண்டும் என்ற நோக்கிலும், பொருளாதார நிலைத்தண்மை பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த தொகையை சர்வதேச நாணய நிதியம் தரஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 9 மாதங்களுக்குள் பாகிஸ்தானுக்கு இந்த நிதியுதவி கிடைத்துவிடும்.வணிக பற்றாக்குறையை சரியாக்கவும்,இறக்குமதியை குறைக்கவும் இந்த நிதி பாகிஸ்தானுக்கு உதவும் என்று ஐஎம்எப் அதிகாரி நாதன் போர்ட்டர் தெரிவித்துள்ளார். ஆற்றல் துறைக்கு தற்போது பணத்தேவை மிக அதிகமாக உள்ள நிலையில் கிடைக்கும் நிதியை அதற்கு அதிகமாக செலவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவி செய்து வருகிறது. இது இந்தியாவுக்கு பிடிக்கவில்லை என்றபோதிலும் எதுவும் செய்ய முடியாமல் நிலைமையை மட்டும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.